NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனை கலைஞர் ஹஸ்மா!

சோலன் புக் ஒஃப் வேல்ட் றெக்கோர்ட் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக “ஹஸ்மா பிறைடல் அகடமியின்” பணிப்பாளர் ஹஸ்மா மலிக் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று மருதானையிலுள்ள அகடமியின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சோலன் புக் ஒஃப் வேல்ட் றெக்கோர்ட் 190 நாடுகளில் இயங்கி வருவதுடன் இம்முறை இலங்கையிலும் ஒப்பனை அலங்காரத் துறையில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு சாதனை பெறுபவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வியாபாரத்துறையில் முன்னேறக்கூடியதாக சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் பங்குபற்றலாம். தரமான சான்றிதழை பெற்று எதிர்காலத்தில் சிறந்த முறையில் இந்த துறையில் முன்னேற இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share:

Related Articles