(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லண்டன் – ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வரும் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 121.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸடீவ் ஸ்மித் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின், மொஹம்மட் சிராஜ் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹம்மட் சமி 122 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாட ஆரம்பித்த இந்திய அணி 69.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக ரஹானே 89 ஓட்டங்களையும், ஷர்துல் தாகூர் 51 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், கெமரூன் கிரீன் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இரு அணிகளுக்குமான முதலாவது இன்னிங்ஸ் நிறைவடைந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி 173 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.