உலக நாயகன் உள்ளிட்ட பட்டங்களை குறிப்பிட்டு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என நடிகர் கமல் ஹாசன் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல் ஹாசன் கடந்த 2018 ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.
கமல் ஹாசன் உலக நாயகன் என்ற அடைமொழியுடன் ரசிகர்களால் அழைக்கப்படும் நிலையில் உலக நாயகன் உள்ளிட்ட பட்டங்களை குறிப்பிட்டு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைப்பதாகவும் மக்கள் கொடுத்துஇ சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
சினிமாக் கலைஇ எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது எனவும்
கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு பொருத்தமானது என்பதால் நிறைய யோசனைக்கு பின்னர் மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்துவிடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
எனவேஇ என் மீது பிரியம் கொண்டவர்கள்இ இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ குறிப்பிட்டால் போதுமானது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும் சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த கோரிக்கை விடுத்துள்ளேன் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புவதாகவும் நடிகர் கமல் ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.