கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், குறித்தப் பகுதியில் குடியிருந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பொலிஸார் அடங்குவதாக எத்தியோப்பியன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கல் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.