2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.