NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நா சபையின் பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொது சபைக்கூட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி தமது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles