NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவில்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அடுத்த மாதம் 24, 25ஆம் திகதிகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஐ.பி.எல் மெகா ஏலத்தை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆய்வு செய்த நிலையில் இறுதியில் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பிசிசிஐ அதிகாரிகள் சிலர் திங்கட்கிழமை நேரில் ஆய்வு செய்வதற்காக ரியாத்துக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகத்தினர், தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஒக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறு பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. இதையடுத்து, நவம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் மெகா ஏலம் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஏலத்தில் பங்கேற்கவுள்ள அணிகளின் குழுக்களுக்கு பயணத் திட்டம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், விரைவில் திகதியையும் இடத்தையும் தெரிவிக்குமாறு அணி நிர்வாகத்தினர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஓரிரு நாட்களில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Share:

Related Articles