NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய மக்கள் சக்தியில் ஆசனம் கிடைக்காததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் போட்டி – அனுஷா சந்திரசேகரன்!

ஐக்கிய மக்கள் சக்தியில் ஆசனம் கிடைக்காததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியில் அவருடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் களம் இறங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியாவில் எமது குரல் ஒலிக்கும் அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசனங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கையில் நாம் களம் இறங்கியுள்ளதில் எதுவித ஐயமும் இல்லை.

எம்மை பொருத்தவரையில் பகிரங்க அரசியல் வேறு. எனது கடந்த கால அரசியல் வேறு. எல்லா விடயத்தையும் நாங்கள் பகிரங்கமாக செய்ய வேண்டிய அவசியமில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கணிசமாக நான் இம்மாவட்டத்தில் 17 ஆயிரம் வாக்குகளை பெற்றேன். எனக்கு அந்த வாக்குகளை வழங்கிய மக்களுடன் இன்றும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன்.

அத்துடன் அவர்களுக்கான விடயங்களை இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.

சில இடங்களில் சில நேரங்களில் அரசியலில் மௌனமும் காக்க வேண்டும். ஆகவே இவ்வளவு நாள் என்னுடைய சேவைகளிலும், அரசியல் செயற்பாட்டிலும் நான் பகிரங்கமாக இருக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட நான் அவர்களிடம் ஒரு ஆசனத்தை கேட்டிருந்தேன். அவர்கள் ஆசனம் தருவதாக கூறியிருந்தார்கள் அதற்கான பேச்சுவார்த்தைகளும் செய்யப்பட்டது.

அதேநேரத்தில் அவர்கள் என்னிடம் கூறியது என்னவெனில் அவர்களின் கட்சியில் நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு ஆசனம் வழங்குவதாகவும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக அக்கட்சியில் இருந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு உழைத்தவர்களுக்கே ஆசனம் வழங்குவதாகவும் ஆகையால் எனக்கு ஆசனம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் விதத்தில் தான் தற்போது ரஞ்சன் ராமநாயக்கவோடு இணைந்து ஐக்கிய மக்கள் குரல் கட்சியில் செயல்பட தொடங்கினோம்.

அரசாங்கத்தில்; மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவே நாம் இவ்வாறு களம் இறங்கியுள்ளோம் என்றார்.

Share:

Related Articles