பதுளை வரை புகையிரதம் இயக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, கலிப்சோ சுற்றுலா புகையிரதத்தின் கலிப்சோ இசை மற்றும் உணவகத்தை புகையிரத திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மலையக புகையிரத பாதை பதுளை வரை நீடிக்கப்பட்டு ஜனவரி 5 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின.
கலிப்சோ புகையிரதத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
மேலும் சில அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர். தற்போது, இந்த புகையிரத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.