NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி..!

2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி,  நவம்பர் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -2.1% ஆக குறைந்துள்ளது.

 இது ஒக்டோபர் 2024 இல் -0.8% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 உணவுப் பணவீக்கமானது, 2024 ஒக்டோபர்  1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ள அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2024 ஒக்டோபர்  1.6 சதவீதத்திலிருந்து 2024 நவம்பரில் 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளது.

Share:

Related Articles