NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோடி கணக்கில் இலாபமடைந்துள்ள வெங்காய இறக்குமதியாளர்கள்!

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் உலர் நெத்திலி இறக்குமதியாளர்கள் 2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 18,590 கோடி ரூபாயை இலாபமாக அடைந்துள்ளதாக கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் குறித்த வருட காலப்பகுதியில் 10,922 கோடி ரூபாயையும், உருளைக்கிழங்கு இறக்குமதியாளர்கள் 3398 கோடி ரூபாயையும் , உலர் நெத்திலி இறக்குமதியாளர்கள் 4269 கோடி ரூபாயையும் இலாபமாக ஈட்டியுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் முதலீட்டுடன் ஒப்பிடும்போது இலாப விகிதமானது பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுக்கு 297 வீதமாகவும் , உருளைக்கிழங்கு இறக்குமதியாளர்களுக்கு 85 வீதமாகவும் , உலர் நெத்திலி இறக்குமதியாளர்களுக்கு 164 வீதமும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் 106 வீதமும், உருளைக்கிழங்கு இறக்குமதியாளர்கள் 124 வீதமும் , உலர் நெத்திலி இறக்குமதியாளர்கள் 196 வீதமும் இலாபம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றில் 273 ரூபாயும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றில் 93 ரூபாயும் , உலர் நெத்திலி கிலோ ஒன்றில் 811 ரூபாயும் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் மாசி கருவாடு இறக்குமதியின் போது கிலோ ஒன்றில் 2319 ரூபாயும், இறக்குமதி செய்யப்படும் பயறு கிலோ ஒன்றில் 848 ரூபாயும் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு தலைதூக்கி வந்தாலும் கூட தற்போதைய விலைவாசிகள் சாதாரண ஒரு மனிதனால் ஈடு கட்ட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

எவ்வாறாயினும், நாளாந்த ஊதியத்தை பெற்று குடும்பத்தை நடத்தும் ஒரு மனிதருக்கு தற்போதைய விலைவாசிகளை சுமப்பது கடினமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles