NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சச்சினின் சாதனையை முறியடித்த சௌமியா சர்கர்!

நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுமியா சர்கர் – அனுமுள் களமிறங்கினர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி, சவுமியா சர்கரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ரன்கள் குவித்தது. அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு சதம் அடித்தார். 22 பவுண்டரி 2 சிக்சருடன் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து மண்ணில் சச்சின் சாதனையை சவுமியா முறியடித்துள்ளார். சச்சின் 2009ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 163 ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது பங்களாதேஷ் வீரர் சவுமியா சங்கர் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் பங்களாதேஷ் அணி வீரர்களில் ஒருவரின் தனிபட்ட அதிகபட்ச ரன்களில் சவுமியா சங்கர் 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லிட்டன் தாஸ் (176) உள்ளார்.

Share:

Related Articles