NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை கைது!

கொழும்பு போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரின் முதலீட்டாளராக தம்மைக் காட்டிக் கொண்டு சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் 4,000க்கும் மேற்பட்ட சீனர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்இ சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைச் சீனாவுக்கு மாற்ற உண்டியல் முறை பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நாட்டவர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு 100 அல்லது 200 அமெரிக்க டொலர்கள் வைப்புத்தொகைக்கு ஈடாக பலன்களை வாக்குறுதியளித்துள்ளார்.

எனினும் அவர் அந்த சலுகைகளைச் செலுத்தாமல் சுமார் 10,000 அமெரிக்க டொலர்களை வைப்பாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Share:

Related Articles