NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சி.ஆர்.பி.எப் பாடசாலையில் பயங்கர வெடிவிபத்து!

தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப் பாடசாலையில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்படடுள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலையின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.

அத்துடன், வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி பொலிஸின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பாடசாலையின் அருகில் நடந்த இந்த வெடி விபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்து வருவதைக் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles