(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே மோதல் நிலைமைய இருந்துவரும் நிலையில் சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு அந்நாட்டு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.