NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற வானிலையால் பலர் பாதிப்பு!

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது.மேலும், ஒருவரைக் காணவில்லை எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1,973 பாதுகாப்பான இடங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles