NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னையில் இதுவரை வடியாத வெள்ளம் – விடுதி கட்டணங்களும் அதிகரிப்பு!

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று (06) வெளியேறினா்.

விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு 3 மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை

விட்டு படகு ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா கருத்து தெரிவிக்கையில், தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles