NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜப்பானில் இன்று (21) காலை 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது.

ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles