NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தந்தை செலுத்திய வாகனத்தில் மோதி சிறுமி உயிரிழப்பு!

மருதானை – புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியில் ஜீப் ஒன்று வீடொன்றுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது சிறு குழந்தையொன்று ஜீப்பில் மோதி உயிரிழந்துள்ளது.

மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் நேற்று பிற்பகல் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கத்திற்கு வாகனத்தை செலுத்திய போது, பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles