லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (14) இடம்பெற்ற 16 ஆவது போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்ட காலி மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் சம நிலையில் காணப்பட சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் காலி மார்வெல்ஸ் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
சுப்பர் ஓவரில் தம்புள்ளை சிக்சர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களை பெற்ற நிலையில், காலி மார்வெல்ஸ் 4 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
காலி மார்வெல்ஸ் சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டமாக பெற்றுக்கொடுத்தார்.
இதனிடையே, போட்டியின் சிறப்பாட்டக்காரராக காலி மார்வெல்ஸ் அணியின் மஹேஷ் தீக்ஷன தெரிவுசெய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.