தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ தேங்காய் 200 ரூபாய்க்கு கொல்வளவு செய்யப்படுகிறது.
இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆயிரம் ரூபாய்க்கும் பெற முடியாத நிலையில் உள்ளதாகவும், தற்பொழுது பண்டிகை காலம் ஆகையால் தமது வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் பண்டிகைக்காலம் ஆரம்பமாகும் பொழுது தமக்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக இரவு பகலாக எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
தற்போது பல தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடும் நிலையில் காணப்படுவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.