NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நட்டத்தில் இயங்கிவந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வருவாய் அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வந்த இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களுக்குள் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சினால் இவ்வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எண்ணெய் இறக்குமதி சந்தைப்படுத்தலின் மூலமாக மாத்திரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் 43.4 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles