NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய அபாயம்!

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இருப்பினும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டமை தொடர்பில் ஆராய வௌியக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles