(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு புறநகரின் சில பிரதேசங்களில் நாளை 20 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய நாளை (13) காலை 10 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனபெலன்வத்தை, கனத்த வீதியில் உள்ள நீர் வெளியேற்றும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, எரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவெல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.