NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நைஜீரியாவில் வீதி விபத்துகள் அடிக்கடி பதிவாகின்ற நிலையில், தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் (09) பயணிகள் பஸ் ஒன்று மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்ஸில் பயணித்த சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 பேரை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் லாகோஸ்-படக்ரி விரைவு சாலை வழியாக மோவோ நகருக்கு அருகே மணல் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles