NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதின்ம வயது சிறுவர்கள் மூவரை காணவில்லை!

புத்தாண்டு தினத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதுடைய இருவர் மற்றும் 14 வயதுடைய ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த மூவரும் வென்னப்புவ தும்மலகெதர மற்றும் ஜெயவீதி மாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்க வென்னப்புவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அலைப்பேசிகளை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன மூவரையும் கண்டறிய அவர்களது அலைப்பேசி எண்களை கண்காணித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles