NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் பயணக் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!

பஸ் பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஒட்டோ டீசலின் விலை அதிகரித்தமையினால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம்இ பஸ் பயணக் கட்டணங்கள் 10 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும்இ முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles