NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வரானார் மரியம் நவாஸ்!

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார்.

இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 327 தொகுதிகளில், மரியம் நவாஸ் தரப்பு பிஎம்எல் -என் கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தம் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து 50 வயதான மரியம் நவாஸ், கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பி.எம்.எல்-கியூ) மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி(ஐபிபி) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles