NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படவிருந்த ரூ.600 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்!

பாகிஸ்தானியர்களிடமிருந்து நேற்று (28) கடத்தப்பட்ட 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக இந்திய கடலோர காவற்படையினரின் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

இந்திய கடலோரக் காவற்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெறுமதி மிக்க போதைப்பொருட்களுடன்”அல் ரஸா” என்ற படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது படகிலிருந்த 14 பேரும் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப்பொருட்கள் சுமார் 86 கிலோ நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த படகில் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குஜராத்தில் உள்ள போர்பந்தர் மாவட்டத்திற்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles