NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடகர் பி.கே.வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் பின்னணிப் பாடகர் பி.கே.வீரமணிதாசனுக்கு இந்த வருடத்திற்கான மதிப்புமிக்க ”ஹரிவராசனம் விருது” கேரள அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற விழாவில் வீரமணிதாசனுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பல்வேறு பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த வீரமணிதாசன், தமிழகத்தை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய” கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சபரி மலை ஜோதிமலை, எல்லாம் வல்ல தாயே, எங்க கருப்பசாமி” போன்ற பாடல்கள் தற்போது வரை கோயில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், பாடகர் பி.கே.வீரமணிதாசனின் ஆன்மீக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி உள்ளது.

இது திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு இணைந்து வழங்கும் விருதாகும். விருதுடன் ஒரு இலட்ச ருபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles