இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக பதவிவகித்த ஜெய் ஷா கடந்த 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பதவியேற்ற நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தற்காலிக செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. முன்னாள் தலைவரான கிரேக் பார்க்லேயின் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய காலக்கெடுவில் பி.சி.சி.ஐ உள்ளது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ.யின் இணை செயலாளரான தேவஜித் சைகியா தற்காலிக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி அறிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.சி.சி. புதிய தவைரான ஜெய் ஷா பதவிவகித்த ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கடந்த 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.