NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரக்ஞானாந்தாவின் பெற்றோருக்கு காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா எலக்ட்ரிக் கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். 

துகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு கார் (E கார்) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சதுரங்கத்திற்கு அறிமுகப்படுத்தவும், அவர்கள் இந்த சிந்தனை விளையாட்டைத் தொடரும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஊக்குவிக்க விரும்புகிறேன் (வீடியோ கேம்களின் புகழ் அதிகரித்த போதிலும்!) எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே இதுவும் நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு.

எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 400 இவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles