NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் மாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பொறுப்பிலிருந்த போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பக்கங்கள் 1 முதல் 50 வரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து பிரிவு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles