NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டிகள் 11 ஆம் திகதி தொடக்கம் !

9 வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் ‘லீக்’ ஆட்டகள் 3 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

2வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5 ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11ஆம் திகதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன.

12 திகதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் அவுஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16ஆம் திகதிகளிலும்இ இறுதிப் போட்டி 20 ஆம் திகதியும் நடக்கிறது.

Share:

Related Articles