பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை நேற்று (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பசறை வல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் இரண்டு, மூன்று நாட்களாக மாற்றத்தை அவதானித்த குறித்த சிறுமியின் தாயார் இது தொடர்பில் கேட்டபோதே, கடந்த 19ஆம் திகதி தாய், வயல் வேலைக்குச் சென்றபோது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய், பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி பசறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.