NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு !

தேசிய வெசாக் வாரம் மே 21 முதல் 27 வரை மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதனை தொடர்ந்து தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மதுக்கடைகள் மூடப்படுவதுடன், விலங்குகள் வெட்டப்படும் இடங்கள், இறைச்சி மற்றும் இறைச்சியை கசாப்பு செய்யும் இடங்களும் மூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles