தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரைஉலகைச்சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இதை தொடர்ந்து சேத்துப்பட்டில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதையடுத்து, சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள மனோஜ் இல்லத்திற்கு அவரது உடலானது கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை 3 மணி வரை இறுதி அஞ்சலிக்காக நடிகர் மனோஜின் உடல்
வைக்கப்பட்டதன் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது .
இதனிடையே, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த்தியுள்ளார் . அதன்பின், இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.