கே.டூ.சிட்டி எனப்படும் சிந்தடின் மர்சுவானா என்ற போதைப்பொருள் விற்பனை இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதனைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த போதைப்பொருள் ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடதாசி தாள் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் உடலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மனநல பாதிப்பையும் ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி புலனாய்வு மற்றும் சமூக காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்று சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.