NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீரியபெத்த பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம் – 27 குடும்பங்கள் வெளியேற்றம்!

பதுளை – கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ..ஜே. பிரியங்கணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டட ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் தோட்ட குடியிருப்புகளில் வசித்து வந்த 27 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles