NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி –  அச்சுவேலி பிரதான வீதி  இன்று திறப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை.

இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர்  நாகலிங்கம்  வேதநாயகமும்  இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி, இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள்  குறித்து  ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலையீட்டின் பேரில் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles