NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி உத்தரவு!

ரஷ்யாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, ரஷ்யாவில் உள்ள அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்ய தயாரிப்புகளை மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மிகவும் முக்கியமானது என்றும், இதுவே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் நோக்கமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles