NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜகிரிய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து..!

கொழும்பு – ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க கோட்டே மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பிரிவு மற்றும் அதன் திணைக்களத்தின் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள வீட்டுத் தொகுதிக்கும் பரவியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், தீ விபத்திற்கான காரணமோ, சேத விபரமோ இதுவரை வெளியாகவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles