(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றுக்குள் நாகப்பாம்பொன்று உட்புகுந்த சம்பவமொன்று நேற்று (06) பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உதவியோடு சுமார் 5 மணிநேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து வெளியேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் வங்கி பூட்டப்பட்டிருந்த நிலையில், வங்கிக்குள் நாகப்பாம்பொன்று உட்புகுந்துள்ளது. அப்பகுதி மக்கள் குறித்த இடத்தில் திரண்டு நிற்க, வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து, வங்கிக்குள்ளிருந்த பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்துள்ளார்.
எனினும், அவர்களால் பாம்பை பிடிக்க முடியாமற்போனமையால், பாம்பு பிடிக்கும் பணியாளர்களை அழைத்து, 5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு இரவு 9 மணியளவிலேயே பாம்பை பிடித்து, எடுத்துச் சென்று வெளியே விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.