NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமானத்தின் அவசரகால கதவைத் திறந்த பெண்ணால் பரபரப்பு!

முதல் முறையாக விமானத்தில் பயணித்த ஒரு பெண், கழிவறை என நினைத்து விமானத்தின் அவசரகால கதவைத் திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண், ஏர் சீனா(Air China) விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று புறப்படத் தயாராக இருந்த நிலையில், விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்துள்ளார்.

இந்நிலையில் அந்த விமானத்திலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணிடம் ஏன் அந்தக் கதவைத் திறந்தீர்கள் என்று கேட்டபோது, முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் அவர், கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு சுமார் 22,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நீதிமன்ற விசாரணை ஏதுமின்று காவலில் அடைக்கப்படலாம் என்பதுடன், இனி விமானத்தில் பயணிக்க அவருக்கு தடையும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles