NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி மூவர் பலி!

நாட்டில் நேற்று 3 வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) பிற்பகல் கிரியுல்ல நகரின் மத்தியில் உள்ள ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போன நிலையில், நீர்கொழும்பு பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இளைஞனின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலருடன் மாஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கலபிடமட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று காலை பொத்துவில், கந்தஹிதாகம ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹுலனுகே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அயலவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles