ஹட்டன் – கொழும்பு ஏ 7 பிரதான வீதியின் ஒரு பகுதி கடந்த சில நாட்களாக கினிகத்தேனை பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக குறித்த இடத்திலிருந்து போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கோவிலுக்கு அருகில் உள்ள பிரதான வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காணமாக, அவ்வீதியூடாக வாகனங்களை செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.