Zee தமிழில் கார்த்திகை தீபம் தொடரில் நாயகனாக செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார்.
அழகை விட, நல்ல மனமும், திறமையும் தான் முக்கியம் என்பதை நிரூபித்து, எப்படி நாயகனுடன் தீபா சேர்ந்து வாழ போகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
கேரளாவை சேர்ந்தவர் ஹர்த்திகா, அவரின் குடும்ப வழக்கப்படி தனது காதல் கணவரை திருமணம் செய்துள்ளார்.
அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.