NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“கீர்த்தி ஷெட்டி” கதாநாயகியாக வேண்டாம்- நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் பிச்சிபாபு சனாவின் இயக்கத்தில் ‘உப்பென்னா’ என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. மேலும், தேசிய விருதையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘லாபம்’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அவர் அப்போது விளக்கமளித்திருந்தார்.

“லாபம்” படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும் போது எப்படி என்னால் Romance செய்ய முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன் என்று கூரியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles