NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினிமாவை விட்டு “5 நடிகர்கள் விலகவே மாட்டோம்” -நடிகர் சல்மான்கான்

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சல்மான்கானுக்கு மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. பாதுகாப்போடு வெளியே செல்கிறார். பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிகின்றன.

இந்த நிலையில் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “இந்தி சினிமா துறைக்கு வந்துள்ள இளம் நடிகர்கள் பலரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக மூத்த நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அவர்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவாலாகவே இருப்போம். நானும், ஷாருக்கான், அஜய்தேவ்கான், அமீர்கான், அக் ஷய்குமார் ஆகியோரும் அவ்வளவு சுலபமாக சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்.

ஓ.டி.டி.யில் அளவுக்கு மீறிய கவர்ச்சி, ஆபாசம், பேச தகாத வசனங்கள் அதிகமாக உள்ளன. செல்போன்களிலும் அவை கிடைக்கின்றன. இதனால் 15 மற்றும் 16 வயது இளம் பிள்ளைகள் அவற்றை பார்க்கிறார்கள். இது சரியல்ல. எனவே ஓ.டி.டி.க்கு தணிக்கை அவசியம்” என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles