NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெயிலர் படத்தை மீண்டும் மீண்டும் விமர்சிக்கும் “Blue சட்டை மாறன்”

சினிமா விமர்சகர் Blue சட்டை மாறன் ஜெயிலர் படம் குறித்து போட்ட பதிவு ரஜினி ரசிகர்களிடையே கடும் கோவத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தினை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்னொருபக்கம் இந்தப் படம் குறித்த விமர்சனங்களும் அதிகமாக வெளியாகி வருகின்றன.

முக்கியமாக Blue சட்டை மாறன் தொடர்ச்சியாக ஜெயிலர் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்.

இதுவரை அவரது விமர்சனங்களை முன் வைத்து வந்த Blue சட்டை மாறன், தற்போது ரசிகர்களின் காணொளியை வெளியிட்டு ஜெயிலரை பங்கம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் ஜெயிலர் பார்த்துவிட்டு வெளியே செல்லும் ரசிகர்களிடம் படம் குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது.

அப்போது வரும் ரசிகை ஒருவர், “ஜெயிலர் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி போரிங்” என தெரிவித்துள்ளார்.

இன்னொரு ரசிகையோ “ஜெயிலர் அப்படியே விக்ரம் பாத்தின் காப்பி” என கலாய்த்துவிட்டுச் செல்கிறார்.

அதேபோல், அனிருத்தின் பின்னணி இசையும் அப்படியே விக்ரம் படத்தின் காப்பி என அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை Twitterல் பகிர்ந்த Blue சட்டை மாறன், “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று நாம சொன்னா வன்மம். வெளிநாட்ல இருக்கற நம்நாட்டு பெண்கள்.. உங்களுக்கு அன்பளிப்பு தந்துருக்காங்க. Catch பண்ணிக்கங்க”என பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles